குப்பை வரியை ரத்து செய்ய பா.ஜனதாவினர் கோரிக்கை

காரைக்காலில் குப்பை வரியை ரத்து செய்ய பா.ஜனதாவினர் கோரிக்கை வைத்துள்ளனர்.
காரைக்கால்
காரைக்கால் மாவட்ட பா.ஜ.க. தலைவர் துரைசேனாதிபதி நிர்வாகிகளுடன் இன்று காரைக்கால் மாவட்ட கலெக்டர் குலோத்துங்கனை சந்தித்து கோரிக்கை மனு வழங்கினர். அந்த மனுவில் கூறி இருப்பதாவது:-
காரைக்கால் மாவட்ட நகராட்சி நிர்வாகம் வீட்டு வரி, கடை வரி வசூலிக்கும் போது, குப்பை வரி கட்டினால்தன் மேற்கண்ட வரிகளை பெற்றுக் கொள்வோம் என நகராட்சி ஊழியர்கள் அடம்பிடிப்பது கண்டனத்திற்குரியது. குப்பை வரிவசூல் குறித்து, புதுச்சேரி முதல்- அமைச்சர் ரங்கசாமி கூறிய குப்பை வரி ரத்து என்ற ஆணையை, காரைக்கால் நகராட்சி தொடர்ந்து ஏற்க மறுத்து வருகிறது. மேலும், எங்களுக்கு அரசிடமிருந்து எழுத்துப்பூர்வமாக எவ்வித அறிவிப்பும் வரவில்லை என்று, பொதுமக்களிடம் நகராட்சி ஊழியர்கள் தினந்தோறும் விவாதம் செய்து வருகிறார்கள். எனவே, தாங்கள் தலையிட்டு, மாநில அரசிடமிருந்து முறையான ஆணை வரும் வரை, குப்பை வரியை தவிர்த்து, ஏனைய வரிகளை மட்டும் நகராட்சி நிர்வாகம் வசூலிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.