ரத்ததான முகாம்


ரத்ததான முகாம்
x

காரைக்கால் வரிச்சிக்குடி அரசு பாலிடெக்னிக் கல்லூரி, மாவட்ட அரசு மருத்துவமனை ரத்த வங்கி சார்பில் ரத்ததான முகாம் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

காரைக்கால்

காரைக்காலை அடுத்த வரிச்சிக்குடி அரசு பாலிடெக்னிக் கல்லூரி, மாவட்ட அரசு மருத்துவமனை ரத்த வங்கி சார்பில் ரத்ததான முகாம் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. முகாமுக்கு கல்லூரி முதல்வர் பிரான்சிஸ் தலைமை தாங்கினார். அரசு மருத்துவமனை ரத்த வங்கி மருத்துவ அதிகாரி ஜமீன்பஷீர் தலைமையிலான மருத்துவ குழுவினர் மாணவர்களிடம் ரத்தம் சேகரித்தனர். இதில் 30 யூனிட் ரத்தம் சேகரிக்கப்பட்டது.

கல்லூரியில் பணியாற்றி வரும் ஊழியரின் குடும்பத்திற்கு மிகவும் ஆபத்தான நிலையில் அரிய வகையான ஏ.பி. பாசிட்டிவ் ரத்தம் வழங்கி உதவிய காரைக்கால் தனியார் வங்கி மேலாளர் வினோத்துக்கு முகாமில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. தேசிய மாணவர் படையை சேர்ந்த லெப்டினன்ட் சீனிவாசன், நாட்டு நலப்பணித்திட்ட அதிகாரி மேகநாதன், பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு அதிகாரி ஜெயபிரகாஷ் ஆகியோர் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.


Next Story