திருக்காஞ்சியில் வெடிகுண்டுகள், கத்தியுடன் ரவுடி கைது


திருக்காஞ்சியில் வெடிகுண்டுகள், கத்தியுடன் ரவுடி கைது
x

திருக்காஞ்சியில் புஷ்கரணி விழா நடைபெறும் நிலையில் வெடிகுண்டுகள், கத்தியுடன் ரவுடியை போலீசார் கைது செய்தனர். மேட்டுப்பாளையத்தில் வீச்சரிவாளுடன் 4 பேர் கும்பல் சிக்கியது.

வில்லியனூர்

திருக்காஞ்சியில் புஷ்கரணி விழா நடைபெறும் நிலையில் வெடிகுண்டுகள், கத்தியுடன் ரவுடியை போலீசார் கைது செய்தனர். மேட்டுப்பாளையத்தில் வீச்சரிவாளுடன் 4 பேர் கும்பல் சிக்கியது.

போலீஸ் ரோந்து

வில்லியனூர் அடுத்த திருக்காஞ்சியில் காசிக்கு வீசம் கெங்கவராக நதீஸ்வரர் கோவிலில் புஷ்கரணி விழா நடந்து வருகிறது. இதையொட்டி புதுவை மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சங்கராபரணி ஆற்றில் புனிதநீராடி சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இதற்காக அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்தநிலையில் திருக்காஞ்சி புதிய பாலம் அருகே வில்லியனூர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகத்துக்கு இடமான முறையில் நின்று கொண்டிருந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர்.

அப்போது அவர் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தார். இதனால் அவர் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது 2 நாட்டு வெடிகுண்டுகள் மற்றும் கத்தி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

ரவுடி கைது

இதையடுத்து அவரை போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் வில்லியனூர் பெரியபேட் பள்ளி தெருவை சேர்ந்த ரவி என்ற பாம் ரவி வர்மன் (வயது 26) என்பதும், ரவுடியான இவர் மீது ஏற்கனவே வெடிகுண்டு வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. தனது எதிரியை தீர்த்துக்கட்டுவதற்காக கத்தி, நாட்டு வெடிகுண்டுகளுடன் சுற்றித்திரிந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 2 நாட்டு வெடிகுண்டுகள், கத்தி பறி முதல் செய்யப்பட்டது.

மேட்டுப்பாளையம்

இதேபோல் மேட்டுப்பாளையம் சாணரப்பேட்டை கல்லறை தோட்டம் அருகே வீச்சரிவாள்களுடன் பதுங்கியிருந்த 4 பேர் கொண்ட கும்பலை மேட்டுப்பாளையம் போலீசார் சுற்றி வளைத்து மடக்கிப் பிடித்தனர்.

விசாரணையில் அவர்கள், சாணரப்பேட்டையை சேர்ந்த ரெமோராஜ் என்ற ராஜதுரை (24), வசந்த் என்ற வசந்தகுமார் (24), மனோ என்ற மனோகர் (23) சரத் (21) என்பது தெரியவந்ததது. இதையடுத்து 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.


Next Story