கண்காணிப்பு கேமராவை உடைத்து பேராசிரியருக்கு கொலை மிரட்டல்

நிலப்பிரச்சினையில் கண்காணிப்பு கேமராவை உடைத்து பேராசிரியருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
அரியாங்குப்பம்
முதலியார்பேட்டை 100 அடி ரோடு ஜெயமூர்த்தி ராஜா நகரை சேர்ந்தவர் கலைச்செல்வன் (வயது 50). இவர் புதுச்சேரி என்ஜினீயரிங் கல்லூரியில் பேராசிரியராக வேலை செய்து வருகிறார். தவளக்குப்பம் போலீஸ் நிலையம் அருகில் ஒரு காலிமனையை கலைச்செல்வன் வாங்கினார். அங்கு சுற்றுச்சுவர் கட்டி, தகரத்தினால் கொட்டகை அமைத்தார். கண்காணிப்பு கேமராவும் பொருத்தி இருந்தார். இந்தநிலையில் தவளக்குப்பத்தை அடுத்த பிள்ளையார்திட்டு பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் விஜயகுமார், அந்த காலிமனை தனக்கு சொந்தம் என கூறி தகராறு செய்து வந்தார். இந்தநிலையில் விஜயகுமார் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவை உடைத்து பேராசிரியர் கலைச்செல்வனை கொலை செய்து விடுவதாக மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இது குறித்த புகாரின்பேரில் தவளக்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story