சென்னை, சிதம்பரத்துக்கு பஸ் போக்குவரத்து


சென்னை, சிதம்பரத்துக்கு பஸ் போக்குவரத்து
x

கோட்டுச்சேரியில் சென்னை, சிதம்பரத்துக்கு பஸ் போக்குவரத்தை அமைச்சர் சந்திரபிரியங்கா தொடங்கிவைத்தார்.

கோட்டுச்சேரி

சென்னை, சிதம்பரத்துக்கு பஸ் போக்குவரத்தை அமைச்சர் சந்திரபிரியங்கா தொடங்கிவைத்தார்.

பி.ஆர்.டி.சி. பஸ் சேவை

காரைக்காலில் இருந்து புதுச்சேரி, சென்னை, சிதம்பரம் உள்பட பல்வேறு பகுதிகளுக்கு புதுச்சேரி சாலை போக்குவரத்து கழக (பி.ஆர்.டி.சி.) பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த நிலையில் கூண்டு மாற்றி புதுப்பிக்கப்பட்ட 2 அரசு பஸ்களின் சேவை தொடக்க விழா இன்று நடைபெற்றது. கோட்டுச்சேரி போலீஸ் நிலையம் எதிரே நடந்த விழாவில் அமைச்சர் சந்திரபிரியங்கா கலந்துகொண்டு பூஜை செய்து தொடங்கி வைத்தார்.

இதில் ஒரு பஸ் காரைக்கால் - சென்னை இடையே கிழக்கு கடற்கரை சாலை வழித்தடத்திலும், மற்றொரு பஸ் காரைக்கால் - சிதம்பரம் வழித்தடத்திலும் இயக்கப்படுகிறது.

591 பேருக்கு நலத்திட்ட உதவி

இதனை தொடர்ந்து புதுவை ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் நெடுங்காடு, கோட்டுச்சேரியை சேர்ந்த பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா கோட்டுச்சேரியில் நடைபெற்றது. விழாவில் அமைச்சர் சந்திரபிரியங்கா கலந்துகொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

விழாவில் ஏழை பெண்களின் திருமண உதவித்தொகை திட்டத்தின் கீழ் 49 பேருக்கு ரூ.39 லட்சம், கருவுற்ற தாய்மார்கள் 64 பேருக்கு ரூ.9 லட்சத்து 72 ஆயிரம், பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 58 பேருக்கு ரூ.87 லட்சம் என மொத்தம் 591 பேருக்கு ரூ.3 கோடியே 55 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

40 பேருக்கு மனைப்பட்டா

வருவாய் மற்றும் பேரிடர் மீட்பு துறையின் மூலம் நெடுங்காடு, கோட்டுச்சேரி பகுதிக்கு உட்பட்ட 40 பேருக்கு மனைப்பட்டா மற்றும் ராஜீவ்காந்தி மருத்துவ காப்பீடு திட்டத்தின் மூலம், 17 பேருக்கு தலா ரூ.30 ஆயிரத்தை அமைச்சர் சந்திரபிரியங்கா வழங்கினார்.

விழாவில் புதுச்சேரி ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை இயக்குனர் இளங்கோவன், உதவி இயக்குனர் மதன்குமார் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story