அரசு சுற்றுலாத்துறை சார்பில் வணிக திருவிழா

புதுச்சேரி அரசு சுற்றுலா துறை மற்றும் புதுச்சேரி வணிக விழா சங்கம் சார்பில் வணிக திருவிழா தொடங்கியது. வாடிக்கையாளர்களுக்கு ரூ.3.25 கோடிக்கு பரிசுகள் வழங்கப்படுகின்றன.
புதுச்சேரி
புதுச்சேரி அரசு சுற்றுலா துறை மற்றும் புதுச்சேரி வணிக விழா சங்கம் சார்பில் வணிக திருவிழா தொடங்கியது. வாடிக்கையாளர்களுக்கு ரூ.3.25 கோடிக்கு பரிசுகள் வழங்கப்படுகின்றன.
வணிக திருவிழா
புதுச்சேரி அரசு சுற்றுலா துறை, புதுச்சேரி வணிக விழா சங்கம் சார்பில் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் வணிக திருவிழா-2023 தொடக்க விழா புதுவை நேரு வீதி-ராஜா திரையங்கம் சந்திப்பில் நேற்று மாலை நடைபெற்றது. விழாவில் முதல்-அமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், அமைச்சர் லட்சுமிநாராயணன், ஏ. கே.டி. ஆறுமுகம் எம். எல். ஏ., ஆகியோர் குத்துவிளக்கேற்றி வணிக திருவிழாவை தொடங்கி வைத்தனர்.
விழாவில் சுற்றுலா துறை இயக்குனர் பிரியதர்ஷினி, புதுச்சேரி வணிகவிழா சங்க தலைவர் குணசேகரன், துணைத்தலைவர்கள் சிவகணேஷ், தணிகாசலம், நமச்சிவாயம், செயலாளர் ரவி, இணை செயலாளர்கள் பாலாஜி, ரவி, வேல்முருகன், பொருளாளர் பிரவீன்குமார் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
ரூ.3.25 கோடிக்கு பரிசு
வணிக திருவிழா அடுத்த மாதம் (பிப்ரவரி) 20-ந் தேதி வரை நடைபெறுகிறது. இதையொட்டி வாடிக்கையாளர்களுக்கு ரூ.3.25 கோடிக்கு பரிசுகள் வழங்கப்படுகிறது.
இதில் ஒரு நபருக்கு 75 சவரன் தங்கமும், 20 பேருக்கு காரும், 40 பேருக்கு ஸ்கூட்டரும், 200 பேருக்கு செல்போன்களும், 2 ஆயிரம் பேருக்கு கிச்சன் செட்டும், 20 ஆயிரம் பேருக்கு பரிசுகளும் வழங்கப்படுகின்றன.






