பணிநீக்க ஊழியர்கள் 106 பேர் மீது வழக்கு


பணிநீக்க ஊழியர்கள் 106 பேர் மீது வழக்கு
x

புதுவை பொதுப்பணித்துறையில் பணியமர்த்தப்பட்ட வவுச்சர் ஊழியர்கள் தற்கொலை மிரட்டல் போராட்டம் நடத்தியதால் போலீசார் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

புதுச்சேரி

புதுவை பொதுப்பணித்துறையில் கடந்த 2016-ம் ஆண்டு சுமார் 1300 ஊழியர்கள் வவுச்சர் சம்பள அடிப்படையில் பணியமர்த்தப்பட்டனர். அவர்கள் தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்பேரில் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.

இந்தநிலையில் அவர்கள் மீண்டும் தங்களுக்கு பணிவழங்கக்கோரி பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். நேற்று அவர்கள் மூலக்குளத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் ஏறி தற்கொலை மிரட்டல் போராட்டம் நடத்தினார்கள்.

இதுதொடர்பாக இளநிலை பொறியாளர் ரமேஷ்குமார் கொடுத்த புகாரின்பேரில் 20 பேர் மீது ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அதேபோல் மேலும் பல ஊழியர்கள் தொட்டியின்கீழ் நின்றுகொண்டு பெட்ரோல் கேன்களுடன் தீக்குளிக்கப்போவதாகவும் மிரட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். அதுதொடர்பாக 21 பெண்கள் உள்பட 86 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


Next Story