'ஸ்மார்ட் சிட்டி' ஊழல் குறித்துசி.பி.ஐ. விசாரிக்க வேண்டும்


ஸ்மார்ட் சிட்டி ஊழல் குறித்துசி.பி.ஐ. விசாரிக்க வேண்டும்
x

புதுச்சேரியில் ‘ஸ்மார்ட சிட்டி’ திட்டத்தில் ஊழல் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று வைத்திலிங்கம் எம்.பி. கூறினார்.

புதுச்சேரி

புதுச்சேரியில் 'ஸ்மார்ட சிட்டி' திட்டத்தில் ஊழல் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று வைத்திலிங்கம் எம்.பி. கூறினார்.

இது தொடர்பாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

மக்கள் குரல் நசுக்கப்படுகிறது

மத்தியில் ஆளும் பா.ஜ.க.வினர் ராகுல்காந்தி பேசியதை காரணம் காட்டி நீதிமன்றம் சென்று தண்டனை வழங்கி எம்.பி. பதவியை பறித்தனர். மத்தியில் ஆளும் மோடி தன்னை எதிர்த்து பேசுவர்கள் மீது எப்படி அடக்குமுறையை கையாள்வது போல் புதுச்சேரியில் மக்களின் குரல் நசுக்கப்படுகிறது. மக்களின் பிரச்சினையை அரசின் கவனத்திற்கு கொண்டு வந்த சுயேச்சை எம்.எல்.ஏ. நேரு மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

புதுவையில் தற்போது மின்வெட்டு, பழுது நீக்குவதில் காலதாமதம் உள்ளிட்ட பிரச்சினைகள் உள்ளது. இதனால் மக்களுக்கு குடிநீர் சரியாக வினியோகிக்கப்படுவதில்லை. சுத்தமான குடிநீரும் கிடைப்பதில்லை.

சி.பி.ஐ. விசாரணை

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பல்வேறு ஊழல்கள் நடந்துள்ளது. இதுகுறித்து முன்னாள் அதிகாரி ஒருவர் மத்திய அரசுக்கு புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஸ்மார்ட் சிட்டி முறைகேடுகள் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும். இது தொடர்பாக மத்திய உள்துறை மந்திரிக்கு கடிதம் எழுத உள்ளேன்.

புதுவை முதல்-அமைச்சர் செய்யும் தவறுக்கு கவர்னர் துணையாக உள்ளார். மாநிலத்தில் பா.ஜ.க. மற்றும் கூட்டணி ஆட்சியில் எவ்வளவு பெரிய குற்றங்கள் நடந்தாலும் கவர்னர் ஆதரவாகவும், எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்தால் சிறிய தவறு இருந்தாலும் சிறையில் அடைப்பார்கள். இதுதான் பா.ஜ.க.வின் நிலைப்பாடு.

இவ்வாறு வைத்திலிங்கம் எம்.பி. கூறினார். பேட்டியின்போது வைத்தியநாதன் எம்.எல்.ஏ., உடனிருந்தார்.


Next Story