11-ம் வகுப்புக்கான சி.பி.எஸ்.இ.பாடத்திட்டம் அறிமுகமானது


11-ம் வகுப்புக்கான சி.பி.எஸ்.இ.பாடத்திட்டம் அறிமுகமானது
x

புதுச்சேரியில் அரசு பள்ளிகளில் 11-ம் வகுப்புக்கான சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம் இன்று முதல் தொடங்கியது. பள்ளிக்கு வந்த மாணவ-மாணவிகளை ஆசிரியர் வரவேற்றனர்.

புதுச்சேரி

புதுச்சேரியில் அரசு பள்ளிகளில் 11-ம் வகுப்புக்கான சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம் இன்று முதல் தொடங்கியது. பள்ளிக்கு வந்த மாணவ-மாணவிகளை ஆசிரியர் வரவேற்றனர்.

பிளஸ்-1 மாணவர் சேர்க்கை

புதுவை மாநிலத்தில் கடந்த கல்வியாண்டில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு எழுதிய மாணவ-மாணவிகளுக்கு தேர்வு முடிவுகள் கடந்த மே மாதம் 19-ந் தேதி வெளியானது. அதைத்தொடர்ந்து புதுவை அரசுப் பள்ளிகளில் பிளஸ்-1 மாணவர் சேர்க்கைக்கு கடந்த மாதம் 26-ந் தேதி முதல் கடந்த 9-ந் தேதி வரை விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன. மாணவர்களின் மதிப்பெண் அடிப்படையில் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டு கலந்தாய்வு, நேர்காணல் மூலம் மாணவ-மாணவிகள் சேர்க்கை நடைபெற்றது.

சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம்

இந்தநிலையில் பிளஸ்-1 மாணவர் சேர்க்கை முடிந்த நிலையில் 19-ந் தேதி பிளஸ்-1 வகுப்புகள் தொடங்கப்படும் என ஏற்கனவே பள்ளிக் கல்வித்துறை அறிவித்தது. அதன்படி புதுச்சேரி மாநிலத்தில் உள்ள மேல்நிலை பள்ளிகளில் இன்று பிளஸ்-1 வகுப்புகள் தொடங்கப்பட்டன. புதுச்சேரியில் நடப்பு கல்வியாண்டு பிளஸ்-1 வரை (எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 தவிர) சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம் அமல்படுத்தப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில் புதுச்சேரி மாநிலத்தில் அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளிலும் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டப்படி வகுப்புகள் தொடங்கின. புதுவை திருவள்ளுவர் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் 11-ம் வகுப்பு சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தின்படி வகுப்புகள் இன்று தொடங்கியது. பள்ளிக்கு வருகை தந்த பிளஸ்-1 மாணவிகளை பள்ளியின் பொறுப்பு துணை முதல்வர் கலியமூர்த்தி தலைமையில் பள்ளியின் விரிவுரையாளர்கள், ஆசிரியர்கள் மாணவிகளுக்கு பூக்கள் கொடுத்தும் இனிப்புகள் வழங்கியும் வரவேற்றனர்.


Next Story