வாடிக்கையாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சி


வாடிக்கையாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சி
x

கோ-ஆப்டெக்ஸ் நிலையத்தில் வாடிக்கையாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.

புதுச்சேரி

புதுச்சேரி கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் வாடிக்கையாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. கடலூர் மண்டல முதுநிலை மண்டல மேலாளர் ரமணி தலைமை தாங்கினார். மெர்குரி வாட்ச் ஹவுஸ் உரிமையாளர் சங்கர், அரசு வக்கீல் ஜான்சி ராணி, பாரதிதாசன் மகளிர் கல்லூரி பேராசிரியர் வாசுகி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளராக முதல்-அமைச்சர் ரங்கசாமி கலந்துகொண்டு, குத்துவிளக்கு ஏற்றி நிகழ்ச்சியை தொடங்கிவைத்தார். அப்போது பேசிய அவர், புதுச்சேரியில் அரசு ஊழியர்கள் மாதத்தில் ஒரு நாள் கைத்தறி ஆடைகளை அணிய வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. அதுபோல் தமிழகத்திலும் நடைமுறைப்படுத்தினால் கோ-ஆப்டெக்ஸ் மேலும் வளரும் என்று தனது விருப்பத்தை தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் ஏராளமான வாடிக்கையாளர்கள் கலந்துகொண்டு தங்கள் கருத்துகளை தெரிவித்தனர். முடிவில் புதுச்சேரி கோ-ஆப்டெக்ஸ் நிலையத்தின் மேலாளர் ஜோதி நன்றி கூறினார்.


Next Story