கல்லூரி மாணவிகள் விழிப்புணர்வு ஓட்டம்


கல்லூரி மாணவிகள் விழிப்புணர்வு ஓட்டம்
x

புதுவை பாரதிதாசன் மகளிர் கல்லூரியில் எச்.ஐ.வி., எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த மாணவிகளுக்கு இடையேயான ஓட்டப்பந்தயம் நடந்தது.

புதுச்சேரி

புதுவை பாரதிதாசன் மகளிர் கல்லூரியின் உடற்கல்வித்துறை, ரெட் ரிப்பன் கிளப் சார்பில் எச்.ஐ.வி., எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த மாணவிகளுக்கு இடையேயான ஓட்டப்பந்தயம் நடந்தது. கல்லூரி முதல்வர் ராஜி சுகுமார் ஓட்டப்பந்தயத்தை தொடங்கிவைத்தார்.

இதில் 50-க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்துகொண்டனர். முடிவில் மாணவிகள் மகாலட்சுமி, காவ்யா, பிரபாவதி, கல்பனா, ஆதிலட்சுமி, வைத்தீஸ்வரி, பவித்ரா, நர்மதா, ரித்திகா, மனோஷினி ஆகியோர் பரிசுகளை பெற்றனர். ஏற்பாடுகளை கல்லூரியின் உடற்கல்வி இயக்குனர் தனலட்சுமி, ரெட் ரிப்பன் கிளப்பின் ஒருங்கிணைப்பாளர் பினோத் பிகாரி சத்பதி ஆகியோர் செய்திருந்தனர்.


Next Story