கல்வியியல் கல்லூரி விரிவுரையாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்


கல்வியியல் கல்லூரி விரிவுரையாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்
x

புதுவை கூட்டுறவு கல்வியியல் கல்லூரியில் கடந்த 10 மாதங்களாக சம்பளம் வழங்கப்படததை கண்டித்து கல்லூரி விரிவுரையாளர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.

புதுச்சேரி

கூட்டுறவுத்துறையின் கீழ் செயல்படும் புதுவை கூட்டுறவு கல்வியியல் கல்லூரியில் 10-க்கும் மேற்பட்ட விரிவுரையாளர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்களுக்கு கடந்த 10 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை. எனவே, நிலுவை சம்பளம் கேட்டும், தங்கள் கல்லூரியை கல்வித்துறையுடன் சேர்க்கை வேண்டும் என்றும் வலியுறுத்தி தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று வகுப்புகளை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக மாணவர்கள் பாதிக்கப்பட்டனர். அடுத்த மாதம் தேர்வு நடைபெற உள்ள நிலையில் பாடங்கள் இன்னும் முழுமையாக நடத்தி முடிக்கப்படவில்லை. இதனால் மாணவர்கள் தேர்ச்சிபெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும் நிலையும் உருவாகியுள்ளது. அடுத்தக்கட்டமாக பாடங்களை நடத்தக்கோரி மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட ஆயத்தமாகி வருவதாக தெரிவிக்கப்பட்டது.


Next Story