கல்லூரி மாணவர் அரசு பஸ் மோதி பலி


கல்லூரி மாணவர் அரசு பஸ் மோதி பலி
x

போலீஸ் எழுத்து தேர்வுக்கு காத்திருந்த கல்லூரி மாணவர் அரசு பஸ் மோதி பலியானார். அவரது தம்பி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காரைக்கால்

போலீஸ் எழுத்து தேர்வுக்கு காத்திருந்த கல்லூரி மாணவர் அரசு பஸ் மோதி பலியானார். அவரது தம்பி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கல்லூரி மாணவர்

காரைக்கால் நேரு நகர் பகுதியைச் சேர்ந்தவர் உதவி சப்-இன்ஸ்பெக்டர் குமார். இவருக்கு சுகந்தேஸ்வரன் (வயது22), சுகுவேந்தன் (20) என்ற இரு மகன்கள் உள்ளனர். சுகந்தேஸ்வரன் காரைக்காலை அடுத்த தாமனாங்குடியில் உள்ள தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு பி.பி.ஏ படித்து வந்தார்.

மேலும், புதுச்சேரி காவலர் பணியிடத்துக்கு உடல் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று, எழுத்து தேர்வுக்காக காத்திருந்தார். சுகுவேந்தன் காரைக்கால் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து விட்டு மேல் படிப்பிற்காக காத்திருக்கிறார்.

அரசு பஸ் மோதி பலி

அண்ணன், தம்பி இருவரும் இன்று பிற்பகல் 3 மணிக்கு, முடிவெட்டுவதற்காக ஒரே மோட்டார் சைக்களில் சென்றனர். காரைக்கால் வேட்டைக்காரன் வீதி சந்திப்பில் சென்றபோது, சிதம்பரத்திலிருந்து வந்த தமிழக அரசு பஸ், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில், இருவரும் தூக்கி எறியப்பட்டனர். அவர்களில் சுகந்தேஸ்வரன், பஸ் சக்ரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பலியானார். அவரது தம்பி சுகுவேந்தன் படுகாயத்துடன் காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து, காரைக்கால் நகர போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story