இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்


இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x

திருக்கனூரில் சார்பதிவாளரை இடமாற்றம் செயயக்கோரி இந்திய கமயூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

திருக்கனூர்

மண்ணாடிப்பட்டு தொகுதி இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் திருக்கனூர் சார்பதிவாளர் அலுவலகம் எதிரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தொகுதி செயலாளர் பெருமாள் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் மன்னாதன், திருமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முன்னாள் எம்.எல்.ஏ. நாரா.கலைநாதன் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். பல்வேறு முறைகேடு புகார் எழுந்துள்ள திருக்கனூர் சார்பதிவாளரை இடமாற்றம் செய்யவேண்டும், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் கட்சி நிர்வாகிகள் அருணாசலம், சங்கர், கருணாகரன், சரவணன், ராமமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

1 More update

Next Story