ஸ்மார்ட் சிட்டி திட்ட அதிகாரிகள் மீது புகார்


ஸ்மார்ட் சிட்டி திட்ட அதிகாரிகள் மீது புகார்
x

ஸ்மார்ட் சிட்டி திட்ட கூட்டத்துக்கு எம்.பி.க்களை அழைக்காதது குறித்து அதிகாரிகள் மீது புகார் தெரிவிக்க உள்ளதாக வைத்திலிங்கம் எம்.பி. கூறினார்.

புதுச்சேரி

ஸ்மார்ட் சிட்டி திட்ட கூட்டத்துக்கு எம்.பி.க்களை அழைக்காதது குறித்து அதிகாரிகள் மீது புகார் தெரிவிக்க உள்ளதாக வைத்திலிங்கம் எம்.பி. கூறினார்.

புதுச்சேரி எம்.பி. வைத்திலிங்கம் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

எம்.பி.க்களை அழைக்கவேண்டும்

முதல்-அமைச்சர் ரங்கசாமி பதவியேற்ற பின் ஓராண்டு கழித்து கடந்த 21-ந்தேதி ஸ்மார்சிட்டி கூட்டத்தை கூட்டியுள்ளார். மத்திய அரசின் மூலம் செயல்படுத்தப்படும் இந்த திட்டம் தொடர்பான கூட்டத்துக்கு 2 எம்.பி.க்களையும் அழைத்திருக்கவேண்டும். ஆனால் எங்களை அழைக்கவில்லை. இந்த திட்டத்தை செயல்படுத்துவது சேதராப்பட்டிலா, உழவர்கரை நகராட்சி பகுதியிலா? என்ற குழப்பத்தை ஏற்படுத்தியவர் அவர் தான்.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்காக மத்திய அரசு ரூ.100 கோடி வழங்கியுள்ளது. கடந்த கால காங்கிரஸ் அரசு ரூ.60 கோடியை ஒதுக்கியது. அதில் தான் தற்போது ரூ.40 கோடிக்கு பணிகள் நடக்கின்றன. புதிய அரசு பதவியேற்று ஒரு பைசா கூட இதற்கு வழங்கவில்லை. கிராமப்புற சாலைகளை மேம்படுத்த மத்திய அரசிடமிருந்து ரூ.50 கோடி வாங்கிக்கொடுத்தோம். ஆனால் காரைக்காலில் சாலைப்பணிகளே நடக்கவில்லை.

அதிகாரிகள் மீது புகார்

கடந்த ஆண்டு 200 கி.மீ. சாலைகள் அமைக்க மத்திய அரசு ரூ.100 கோடி தர தயாராக இருந்தது. ஆனால் அதற்கான திட்ட அறிக்கையை கூட இந்த அரசு மத்திய அரசுக்கு வழங்கவில்லை. எனவே முதல்-அமைச்சர் ரங்கசாமி திட்டங்களை ஏன் செயல்படுத்த முடியவில்லை என்றும் அதற்கான காரணத்தையும் கண்டுப்பிடிக்க வேண்டும். சாலை அமைக்க பூமிபூஜை போடுகிறார்கள். ஆனால் வேலை எதுவும் நடக்கவில்லை.

ஆட்சியில் இருப்பவர்கள் தங்களுக்குள் போடும் பதவி சண்டை பற்றி எங்களுக்கு கவலையில்லை. ஆனால் மக்களுக்காக வேலைகள் நடக்கவேண்டும். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை செயல்படுத்த போதிய அதிகாரிகளும் இல்லை. ஸ்மார்ட் சிட்டி திட்ட கூட்டத்துக்கு எம்.பி.க்களை அழைக்காதது குறித்து அதிகாரிகள் மீது புகார் தெரிவிக்க உள்ளேன்.

இவ்வாறு வைத்திலிங்கம் எம்.பி. கூறினார்.


Next Story