பரிசு பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு

புதுவையில் பரிசு பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.
புதுச்சேரி
சர்வதேச அளவிலான கராத்தே போட்டிகள் ஐதராபாத்தில் நடந்தது. இதில் புதுச்சேரி அஜன் ஸ்கான் கோஜி காய் கராத்தே பயிற்சி பள்ளி மாணவ-மாணவிகள் பல்வேறு பிரிவுகளில் கலந்துகொண்டனர். இதில் 20 முதல் பரிசு, 6 2-வது பரிசுகள் பெற்றனர்.
சர்வதேச அளவில் சாதித்த மாணவர்களுக்கு புதுவையில் பாராட்டு விழா நடந்தது. விழாவில் சிறப்பு விருந்தினராக சமூக சேவகரும், ராதா இண்டஸ்ட்ரீஸ் நிறுவனருமான பிரகாஷ் கலந்துகொண்டு மாணவ-மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கி பாராட்டினார். விழாவில் அஜன் ஸ்கான் கோஜி காய் கராத்தே பள்ளியின் தலைமை தொழில்நுட்ப வல்லுனர் அழகப்பன், தலைமை பயிற்சியாளர் ரென்ஷி குமரன், மூத்த பயிற்சியாளர்கள் ராமராஜா, சமிதாகாந்தி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story






