கட்டிட தொழிலாளி தீக்குளித்து தற்கொலை


கட்டிட தொழிலாளி தீக்குளித்து தற்கொலை
x

அரியாங்குப்பத்தில் கட்டிட தொழிலாளி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

அரியாங்குப்பம்

அரியாங்குப்பத்தில் கட்டிட தொழிலாளி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

கட்டிட தொழிலாளி

அரியாங்குப்பம் மணவெளி பெரியார் நகரை சேர்ந்தவர் பழனிவேலு (வயது 62). கட்டிட தொழிலாளி. இவருக்கு செல்வி (59) என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். மகள்களுக்கு திருமணமாகி விட்டது.

கடந்த ஓராண்டாக பழனிவேல் சரியாக வேலைக்கு செல்லாமல் மது குடித்துவிட்டு வீட்டிலேயே இருந்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும் அடிக்கடி தனது அருகில் யாரோ இருக்கிறார்கள், அவர்கள் தீயிட்டு கொளுத்தி கொண்டார்கள், வெட்ட வருகிறார்கள் என சொல்லி மனநலம் பாதித்தவர் போல் பழனிவேலு கூறி வந்துள்ளார்.

தீக்குளித்து சாவு

இந்த நிலையில் நேற்று வீட்டின் மாடியில் பழனிவேலுவின் அலறல் சத்தம் கேட்டது. உடனே அவரது மூத்த மகள் வேல்விழி சென்று பார்த்தபோது, உடலில் பெட்ரோல் ஊற்றி கொளுத்தி கொண்டு பழனிவேலு தீக்காயத்தில் அலறிக் கொண்டிருந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் கூச்சலிட்டார். சிறிது நேரத்தில் அவர் தீயில் கருகி கரிக்கட்டையாக இறந்து போனார்.

தகவல் அறிந்த அரியாங்குப்பம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகானந்தம் தலைமையிலான போலீசார், பழனிவேலு உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கட்டிட தொழிலாளி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.


Next Story