அசுத்தமான குடிநீர் வினியோகம்


அசுத்தமான குடிநீர் வினியோகம்
x

கோட்டுச்சேரி பகுதியில் அசுத்தமான குடிநீர் வினியோகம் செய்யப்படுவதால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர்.

கோட்டுச்சேரி

கோட்டுச்சேரி பகுதியில் அசுத்தமான குடிநீர் வினியோகம் செய்யப்படுவதால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர்.

பொதுமக்கள் அவதி

காரைக்காலை அடுத்த கோட்டுச்சேரி கொம்யூன் பஞ்சாயத்துக்குட்பட்ட ஜீவா நகர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

இந்த பகுதியில் கொம்யூன் பஞ்சாயத்து சார்பில் வினியோகிக்கப்படும் குடிநீர் அசுத்தமாகவும், சேறும், சகதியுமாக கலந்து வருவதாக கூறப்படுகிறது. கடந்த சில வாரங்களாகவே இப்படி சுகாதாரமற்ற குடிநீர் வினியோகம் செய்யப்படுவதாகவும் இதுபற்றி புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. குடிக்க முடியாத அளவுக்கு தண்ணீர் கலங்கலாக இருப்பதால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர்.

சுத்திகரிக்கப்பட்ட குடிநீர்

காரைக்கால் மாவட்டத்தில் கடந்த ஆண்டு கழிவுநீர் கலந்த குடிநீர் வினியோகம் செய்யப்பட்டதால் 500-க்கும் மேற்பட்டோர் வாந்தி, பேதியால் அவதிப்பட்டனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து காரைக்காலில் அவசர நிலை பிரகடனம் அறிவிக்கப்பட்டது.

எனவே மீண்டும் அதுபோன்ற சம்பவம் நடைபெறுவதற்கு முன்பு கொம்யூன் பஞ்சாயத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பொதுமக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story