மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு வருகிற 5-ந் தேதி தொடங்குகிறது


மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு வருகிற 5-ந் தேதி தொடங்குகிறது
x

மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு வருகிற 5-ந்தேதி தொடங்கும் எனவும், 10 சதவீத இடஒதுக்கீட்டுக்கு ஒப்புதல் கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் முதல்-அமைச்சர் ரங்கசாமி கூறினார்.

புதுச்சேரி

மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு வருகிற 5-ந்தேதி தொடங்கும் எனவும், 10 சதவீத இடஒதுக்கீட்டுக்கு ஒப்புதல் கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் முதல்-அமைச்சர் ரங்கசாமி கூறினார்.

ஜி.எஸ்.டி.யின் 'எனது பில் எனது உரிமை' எனும் பரிசு திட்டத்தை முதல்-அமைச்சர் ரங்கசாமி தனது அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் தொடங்கிவைத்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

4 திட்டங்கள்

புதுவையில் கியாஸ் மானிய திட்டம், விபத்து காப்பீடு திட்டம், பெண் குழந்தைகளுக்கு ரூ.50 ஆயிரம் வைப்புத்தொகை வழங்கும் திட்டம், குடும்ப தலைவிகளுக்கு ரூ.1,000 உதவித்தொகை வழங்கும் திட்டம் ஆகிய 4 திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டங்களுக்கு தேவையான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

சமையல் கியாஸ் சிலிண்டர் மானியம் வழங்குவதற்கு ஆதார், இணைப்பு எண் உள்ளிட்ட விவரங்கள் பெட்ரோலிய அமைச்சகத்திடம் கேட்கப்பட்டுள்ளது. அவை அனைத்தும் கிடைத்தவுடன் மானியம் அவரவர் வங்கிக்கணக்கில் சேர்க்கப்படும். விபத்து காப்பீடு திட்டத்துக்காக ரூ.90 லட்சம் செலுத்தப்பட்டுள்ளது.

10 சதவீத இடஒதுக்கீடு

எங்கள் அரசில் முதியோர் உதவித்தொகை, இலவச அரிசிக்கான பணம் ஆகியவை முறையாக வழங்கப்பட்டு வருகிறது. இதற்கு தேவையான நிதியும் பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளது.

அரசுப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதற்கான கோப்பு மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த கோப்பு உள்துறை அமைச்சகத்திலிருந்து தற்போது சுகாதாரத்துறைக்கு சென்றுள்ளது. இதற்கு ஒப்புதல் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை உள்ளது.

இந்தநிலையில் வருகிற 5-ந்தேதி மருத்துவ கலந்தாய்வினை தொடங்க உள்ளோம். அதற்குள் 10 சதவீத இடஒதுக்கீட்டிற்கு ஒப்புதல் கிடைத்துவிடும் என்றும் நம்பிக்கை உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story