கோர்ட்டுக்கு வருவோர் போலீசாரால் கண்காணிப்பு


கோர்ட்டுக்கு வருவோர் போலீசாரால் கண்காணிப்பு
x

புதுவையில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதினால், கோர்ட்டுக்கு வருவோர் போலீசாரால் கண்காணிக்கப்படுகின்றனர்.

புதுச்சேரி

கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் புதுவையில் பொதுஇடங்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கோர்ட்டுகளில் அனைவரும் முகக்கவசம் அணியவேண்டும் என்று ஐகோர்ட்டும் உத்தரவிட்டுள்ளது.

இந்தநிலையில் கோர்ட்டுக்கு வருபவர்கள் முகக்கவசம் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தி புதுவை தலைமை நீதிபதி செல்வநாதன் கடந்த சில நாட்களுக்கு முன்பு முகக்கவசங்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இந்தநிலையில் இன்று புதுவை கோர்ட்டுக்கு முகக்கவசம் அணிந்து வருகிறார்களா? என்று போலீசார் கண்காணித்தனர். முகக்கவசம் அணியாதவர்களை முகக்கவசம் வாங்கி அணிந்து வருமாறு அறிவுறுத்தினர்.


Next Story