புதிய பஸ் நிலையத்தில் பிளாட்பாரங்கள் இடிப்பு


புதிய பஸ் நிலையத்தில் பிளாட்பாரங்கள் இடிப்பு
x

புதுவை புதிய பஸ் நிலையத்தில் பிளாட்பாரங்கள் இடிக்கும் பணிகள் தொடங்கியுள்ளது.

உருளையன் பேட்டை,

புதுவை புதிய பஸ் நிலையத்தில் பிளாட்பாரங்கள் இடிக்கும் பணிகள் தொடங்கியுள்ளது.

தடுப்புகள்

'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தின்கீழ் உருளையன்பேட்டை புதிய பஸ் நிலையத்தில் மேம்பாட்டு பணிகள் நடைபெற உள்ளன. இதில் பஸ் நிலைய மையப்பகுதியில் சுமார் 3 ஆயிரத்து 500 சதுரமீட்டர் பரப்பளவில் கடைகள், அலுவலகங்கள் கட்டப்பட உள்ளன. அதற்கு வசதியாக மையப்பகுதியை சுற்றிலும் தடுப்புகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் போராட்டத்தில் குதித்தனர். இதனிடையே பஸ் நிலையத்தின் கிழக்கு மற்றும் தெற்கு புறத்தில் முழுமையாக தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த சூழலில் பஸ் நிலையத்தில் பஸ்கள் நிறுத்தும் இடத்தில் உள்ள பிளாட்பாரங்களை இடிக்கும் பணி இன்று நடந்தது. பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து அகற்றும் பணி தொடங்கியது.

தொழிலாளர்கள் தீவிரம்

அதாவது மையப் பகுதிகளில் கட்டிடம் கட்ட அமைக்கப்பட்டுள்ள தடுப்புகளை சுற்றி பஸ்கள் செல்லும் வகையில் வழி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனிடையே விழுப்புரம், காரைக்கால் வழித்தட பஸ்கள் பிளாட்பார கவுண்டர்களில் (பஸ் நிறுத்தும் இடம்) நிறுத்தப்படும்போது சுற்றி செல்லும் பஸ்களுக்கு குறுகிய அளவிலான பாதை மட்டுமே கிடைக்கும் சூழ்நிலை உருவானது.

இதனால் ஏற்படும் இடநெருக்கடியை தவிர்க்கும் வகையில் பஸ்களை உள்ளே தள்ளி நிறுத்துவதற்கு வசதியாக பிளாட்பாரங்கள் இடிக்கும் பணியில் தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்த பணியானது தீவிரமாக நடந்து வருகிறது.


Next Story