அனைத்து ஊழியர் சங்கங்கள் ஆர்ப்பாட்டம்


அனைத்து ஊழியர் சங்கங்கள் ஆர்ப்பாட்டம்
x

புதுவை பாண்லே நிறுவனத்தில் ரூ.20 கோடி நிதி இழப்பு ஏற்பட்டுள்ளதால் அனைத்து ஊழியர் சங்கங்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

புதுச்சேரி

பாண்லே நிறுவனம் ஊழலில் சிக்கி தவிப்பதாகவும், அதிகாரிகளால் ரூ.20 கோடிக்கும் மேல் நிதியிழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கூறி, குரும்பாப்பட்டில் உளள பாண்லே பால் பண்ணை முன்பு அனைத்து ஊழியர் சங்கங்கள் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்துக்கு ஏ.ஐ.டி.யு.சி. மாநில பொதுச்செயலாளர் சேதுசெல்வம், நாம் தொழிலாளர் நலச்சங்க செயலாளர் ரமேஷ் ஆகியோர் தலைமை தாங்கினா். ஆர்ப்பாட்டத்தில் ஏ.ஐ.டி.யு.சி., தொ.மு.ச., நாம் தமிழர் தொழிலாளர் சங்கம், பாண்லே தொழிலாளர் சங்கம், என்.ஆர். தொழிற்சங்கம் உள்பட பல்வேறு தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.


Next Story