புதுவையில் ஆர்ப்பாட்டம்


புதுவையில் ஆர்ப்பாட்டம்
x

புதுச்சேரியில் அதிகாரிகள் மீது நடவடிக்கைக்கோரி இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

புதுச்சேரி

காவல் சித்ரவதைக்கு எதிரான கூட்டியக்கம் சார்பில் இன்று காலை சுதேசி மில் அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு இயக்க ஒருங்கிணைப்பாளர் முருகானந்தம் தலைமை தாங்கினார். இதில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி அமைதியாக போராடிய மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய வழக்கு குறித்து விசாரணை நடத்திய நீதிபதி அருணா ஜெகதீசன் அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ள அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.


Next Story