பக்தர்கள் தீக்குண்டம் இறங்கி நேர்த்திக்கடன்

சின்னபாபு சமுத்திரத்தில் அமைந்துள்ள திரவுபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழாவில் பக்தர்கள் தீக்குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
கண்டமங்கலம்
கண்டமங்கலம் அருகே உள்ள சின்னபாபு சமுத்திரத்தில் அமைந்துள்ள திரவுபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா கடந்த மாதம் 22-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. தொடர்ந்து தினமும் அம்மன் வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது. கடந்த 30-ந் தேதி திருக்கல்யாண நிகழ்வு நடைபெற்றது. முக்கிய நிகழ்வான தீமிதி திருவிழா நேற்று இரவு நடைபெற்றது. நிகழ்ச்சியில் பல்வேறு கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் தீக்குண்டம் இறங்கி நேர்த்திக் கடனை செலுத்தினர். கோவில் விழாவையொட்டி, கண்டமங்கலம் சப்-இன்ஸ்பெக்டர் பிரேம்குமார் தலைமையில் 20-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story






