கட்டணம் செலுத்தாத 61 குடிநீர் இணைப்புகள் துண்டிப்பு


கட்டணம் செலுத்தாத 61 குடிநீர் இணைப்புகள் துண்டிப்பு
x

கட்டணம் செலுத்தாத 61 குடிநீர் இணைப்புகளை துண்டித்து பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து நடவடிக்கை எடுத்துள்ளது.

பாகூர்

கட்டணம் செலுத்தாத 61 குடிநீர் இணைப்புகளை துண்டித்து பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து நடவடிக்கை எடுத்துள்ளது.

குடிநீர்

பாகூர் கொம்யூன் பஞ்சாயத்திற்குட்பட்ட கரையாம்புத்தூர் அடுத்த பனையடிகுப்பம் கிராமப் பகுதியில் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இதற்காக பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து சார்பில் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் அந்த பகுதியில் சிலர் பல மாதங்களாக குடிநீர் கட்டணம் செலுத்தாமல் இருந்ததாகவும் புகார் எழுந்தது. இதுதொடர்பாக பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இருப்பினும் பொதுமக்கள் கட்டணம் செலுத்தாமல் இருந்தனர்.

61 குடிநீர் இணைப்பு துண்டிப்பு

இதையடுத்து பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் கார்த்திகேயன் உத்தரவின் பேரில் அலுவலக மேலாளர் ரவி, இளநிலை பொறியாளர் பிரதீப் குமார், வருவாய் ஆய்வாளர் முகமது கபீர் மற்றும் ஊழியர்கள் அந்த பகுதியில் சோதனை செய்தனர். அப்போது குடிநீர் கட்டணம் செலுத்தாத 61 குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டது.

மேலும் குடிநீர் பாக்கி கட்டணத்தை செலுத்தி இணைப்பை மீண்டும் புதுப்பித்துக்கொள்ளுமாறு கொம்யூன் பஞ்சாயத்து அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.


Next Story