அலையாத்தி காடுகளில் பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றம்


அலையாத்தி காடுகளில் பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றம்
x

காரைக்கால் கடற்கரை சாலையில் உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி அலையாத்தி காடுகளில் பிளாஸ்டிக்கழிவுகள் அகற்றும் பணி நடைபெற்றது.

காரைக்கால்

உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி காரைக்கால் மாவட்ட நிர்வாகம் மற்றும் புதுச்சேரி வன பாதுகாப்புத்துறை இணைந்து, காரைக்கால் கடற்கரை சாலையில் உள்ள அலையாத்தி காடுகளில் முதல் முறையாக பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றும் பணி நடைபெற்றது. புதுச்சேரி மாநில வன பாதுகாப்பு அதிகாரி விஜி, மாவட்ட துணை கலெக்டர் பாஸ்கரன் (பேரிடர் மேலாண்மை) ஆகியோர் நேரிடையாக சிறிய படகுகளில் அலையாத்தி காடுகள் உள்ளே சென்று சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் குப்பைகள், பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றினர்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட குடிமை பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் தன்னார்வலர்கள், காரைக்கால் காமராஜர் பொறியியல் கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு அலையாத்தி காடுகள் மற்றும் சதுப்பு நில காடுகளில் உள்ள பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றினார்.


Next Story