எலக்ட்ரீசியன் பலி


எலக்ட்ரீசியன் பலி
x

காரைக்காலில் மோட்டார் சைக்கிள்கள் மோதியதில் எலக்ட்ரீசியன் பலியனார்.

காரைக்கால்

காரைக்கால் சேத்திலால் நகரில் வசிப்பவர் அந்தோணி (வயது30). எலக்ட்ரீசியன். இவருக்கு கடந்த பிப்ரவரி மாதம் திருமணம் ஆனது. இன்று மதியம் உணவு சாப்பிடுவதற்காக, வேலை செய்யும் இடத்தில் இருந்து வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். காரைக்கால் காமராஜர் சாலை-அல்லிக்குளத்து வீதி சந்திப்பில் சென்றபோது பள்ளி மாணவிகள் குறுக்கே சென்றுள்ளனர். எனவே மாணவிகள் மீது மோதாமல் இருக்க, எதிர் திசையில் சென்றார். அப்போது எதிரே வந்த சேத்தூரை சேர்ந்த கதிரவன் (28) மோட்டார் சைக்கிள் மீது மோதினார்.

இதில் தூக்கி வீசப்பட்டதில் அந்தோணி பலத்த காயம் அடைந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். விபத்து குறித்து காரைக்கால் போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story