சாலையோர ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்


சாலையோர ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்
x

புதுவை கருவடிக்குப்பத்தில் சாலையோர ஆக்கிரமிப்பு கடைகளை போலீசார் அதிரடியாக அகற்றினார்கள்.

கருவடிக்குப்பம்,

புதுவை கருவடிக்குப்பத்தில் சாலையோர ஆக்கிரமிப்பு கடைகளை போலீசார் அதிரடியாக அகற்றினார்கள்.

ஆக்கிரமிப்பு

புதுவை நகரப்பகுதியில் உள்ள சாலைகளில் ஆக்கிரமிப்பு கடைகள் அதிகரித்துள்ளது. இதனால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்தநிலையில் கருவடிக்குப்பம் சித்தானந்தா சாமி கோவிலில் இருந்து சிங்கம் பார்க் வரையிலான கருவடிக்குப்பம் சாலையில் ஏராளமானவர்கள் தள்ளுவண்டிகள் மூலம் சாலையை ஆக்கிரமித்து கடைகளை நடத்தி வருகின்றனர். இதுதொடர்பாக போக்குவாரத்து போலீசாருக்கு புகார்கள் வந்தன.

அபராதம்

இதைத்தொடர்ந்து கோரிமேடு போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக் குமார் தலைமையில் போக்குவரத்து போலீசார் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றினார்கள். சாலையை ஆக்கிரமித்து கடை வைத்திருந்தவர்களை சாலையின் ஓரத்தில் அமைத்து வியாபாரம் செய்யுமாறு அறிவுறுத்தினார்கள்.

மேலும் சாலைகளில் தாறுமாறாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களுக்கு அபராதமும் விதித்தனர். இதன் காரணமாக கருவடிக்குப்பம் சாலை சிறிதுநேரம் பரபரப்பாக காணப்பட்டது.


Next Story