சமத்துவ பொங்கல் விழா


சமத்துவ பொங்கல் விழா
x

காரைக்கால் அவ்வை அரசு மகளிர் கல்லூரியில் பொங்கல் விழா நடைபெற்றது.

காரைக்கால் அவ்வையார் அரசு மகளிர் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. விழாவுக்கு கல்லூரி முதல்வர் கனகவேல் தலைமை தாங்கினார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் அன்சாரிபாபு மற்றும் பேராசிரியர்கள் பொங்கல் அடுப்பை பற்றவைத்து விழாவை தொடங்கி வைத்தனர்.

தொடர்ந்து, கல்லூரி வளாகத்தில் திரளான மாணவிகள் பொங்கல் வைத்தனர். அப்போது ஒருவருக்கு ஒருவர் பொங்கல் வாழ்த்து தெரிவித்தனர்.

இதேபோல் காரைக்கால் அறிஞர் அண்ணா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, காரைக்கால் அம்மையார் மேல்நிலைப்பள்ளியிலும் சமத்துவ பொங்கல் விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது.

1 More update

Next Story