தொழிலாளியின் வீட்டுக்கு செல்ல பாதை வசதி


தொழிலாளியின் வீட்டுக்கு செல்ல பாதை வசதி
x

காரைக்காலில் ரெயில்வே திட்ட பணிகளால் பாதை வசதி இல்லாததால் வீட்டிற்கு செல்ல பாலம் கட்டி தருமாறு கலெக்டரிடம் தொழிலாளி கோரிக்கை வைத்தார்.

காரைக்கால்

காரைக்காலை அடுத்த மேல புத்தகமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் ரவி. கூலித்தொழிலாளியான இவர் தனது குடும்பத்துடன் அந்தப் பகுதியில் வசித்து வருகிறார். இந்தநிலையில் காரைக்கால்-பேரளம் ரெயில் திட்ட பணிகள் நடந்து வருவதால் அவரது வீட்டின் முன்பகுதி வாசல் அடைப்பட்டது. இதனால் இவர் வீட்டின் பின்பக்கத்தை வாசலாக பயன்படுத்தி வருகிறார். வீட்டின் பின்புறத்தில் வாய்க்கால் ஒன்று உள்ளது. வாய்க்காலை கடந்து 100 மீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டியுள்ளது. வாய்க்காலில் பாலம் இல்லாததால் தென்னை மரத்தை வாய்க்காலில் குறுக்காக போட்டு தற்காலிகமாக பாதை ஏற்படுத்தி உள்ளார். மழை காலத்தில் தண்ணீர் பெருக்கெடுத்து வந்தால் வெள்ளத்தில் தென்னை மரம் அடித்து செல்லப்பட்டு விடும். எனவே வீட்டுக்கு செல்ல பாதை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்று கலெக்டருக்கு கண்ணீர் மல்க ரவி கோரிக்கை விடுத்துள்ளார்.


Next Story