மோட்டார் சைக்கிள் திருடிய தந்தை, மகன் கைது


மோட்டார் சைக்கிள் திருடிய தந்தை, மகன் கைது
x

காரைக்காலில் மோட்டார் சைக்கிள் திருடிய தந்தை, மகன் கைது செய்யப்பட்டனர்.

காரைக்கால்

காரைக்காலில் மோட்டார் சைக்கிள் திருடிய தந்தை, மகன் கைது செய்யப்பட்டனர்.

மோட்டார் சைக்கிள் திருட்டு

காரைக்கால் நகரம் மற்றும் சுற்றுவட்டாரங்களில் கடந்த சில மாதமாக மோட்டார் சைக்கிள்கள் அடிக்கடி திருட்டு போனது. அதை தடுக்கும் வகையில் மாவட்ட சீனியர் போலீஸ் சூப்பிரண்டு லோகேஸ்வரன் தீவிர வாகன சோதனையில் ஈடுபட போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் காரைக்கால் நகர போலீசார், இன்ஸ்பெக்டர் லெனின் பாரதி தலைமையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கு இடமாக மோட்டார் சைக்கிளை ஓட்டிவந்த ஒருவரை, போலீசார் பிடித்து விசரித்தபோது அவர், முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினார்.

தந்தை மகன் கைது

பின்னர் போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தபோது அவர், நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை தாலுகா சூரமங்கலம் பகுதியைச் சேர்ந்த பிரவீன் குமார் (வயது 23) என்பதும், சமீபத்தில் காரைக்கால் நகர் பகுதியில் 4 மோட்டார் சைக்கிளை திருடியதையும் ஒப்புக்கொண்டார்.

மேலும், இந்த திருட்டுக்கு உடந்தையாக அவரது தந்தை குருமூர்த்தி (48) இருந்ததும் தெரியவந்தது. அதைத்தொடர்ந்து இருவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 4 மோட்டார் சைக்கிள்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

1 More update

Next Story