தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதிஉதவி


தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதிஉதவி
x

காரைக்காலில் தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தொகுதி எம்.எல்.ஏ. நாஜிம் நிதிஉதவி வழங்கினார்.

காரைக்கால்

காரைக்கால் தோமாஸ் அருள் திடல் பகுதியை சேர்ந்தவர் சுகந்தி. இவரது குடிசை வீடு நேற்று இரவு திடீரென்று தீப்பிடித்து எரிந்தது. இதில் வீட்டில் இருந்த பொருட்கள் எரிந்து நாசமானது.

இதுபற்றி தகவல் அறிந்த தொகுதி எம்.எல்.ஏ. நாஜிம், தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் மாவட்ட வருவாய்த்துறை மூலம் நிவாரண உதவியாக ரூ.20 ஆயிரம் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் தாசில்தார் மதன்குமார் மற்றும் துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.

1 More update

Next Story