பெண் என்ஜினீயரிடம் ரூ.87 ஆயிரம் மோசடி


பெண் என்ஜினீயரிடம் ரூ.87 ஆயிரம் மோசடி
x

புதுவையில் பெண் என்ஜினீயரிடம் ஆன்லைன் மூலம் ரூ.87 ஆயிரம் மோசடி செய்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

புதுச்சேரி

புதுவையில் பெண் என்ஜினீயரிடம் ஆன்லைன் மூலம் ரூ.87 ஆயிரம் மோசடி செய்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

பெண் என்ஜினீயர்

முத்தியால்பேட்டை லோகமுத்து மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் நடராஜன். அவரது மகள் பத்மபிரியா (வயது 25). ஐ.டி. நிறுவனத்தில் என்ஜினீயராக பணி செய்து வருகிறார். சம்பவத்தன்று இவரது செல்போனுக்கு 'வாட்ஸ் அப்' மூலம் ஒரு லிங் வந்தது. இதனை பார்த்த போது, ஒரு சிறு தொகை கட்டி நாங்கள் தரும் விளையாட்டை விளையாடி வெற்றி பெற்றால் பணம் இரட்டிப்பாகும் என்று கூறப்பட்டு இருந்தது.

இதை உண்மை என்று நம்பிய பத்மபிரியாவும் பணத்தை செலுத்தி விளையாட தொடங்கினார். விளையாட்டில் வெற்றி பெற்றவுடன் பணம் இரட்டிப்பாக கிடைத்தது. அதனை பத்மபிரியா தனது வங்கி கணக்கிற்கு மாற்றிக்கொண்டார்.

ரூ.87 ஆயிரம் மோசடி

தொடர்ந்து அவர் ரூ.87 ஆயிரம் செலுத்தி விளையாடினார். இதன் மூலம் கிடைத்த இரட்டிப்பு பணத்தை தனது வங்கி கணக்கிற்கு மாற்ற முயற்சி செய்தார். அப்போது எதிர்முனையில் பேசிய நபர் நீங்கள் அந்த பணத்தை எடுக்க பிலிப்பைன்ஸ் நாட்டின் விதிப்படி ரூ.31 ஆயிரம் வரி செலுத்த வேண்டும் என்று கூறினார். ஆனால் பத்மபிரியா தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை என்று கூறியுள்ளார்.

இதையடுத்து அவர்கள் அந்த லிக்கை பிளாக் செய்து விட்டனர். தான் மோசடி செய்யப்பட்டதை உணர்ந்த அவர் இதுகுறித்து முத்தியால்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பத்மபிரியாவிடம் மோசடி செய்தது யார்? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story