இலவச மருத்துவ முகாம்


இலவச மருத்துவ முகாம்
x

புதுவை குருசுக்குப்பம் என்.கே.சி. அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இலவச மருத்துவ முகாம் நடந்தது.

புதுச்சேரி

புதுவை ராஜ்பவன் தொகுதி குருசுக்குப்பம் என்.கே.சி. அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இலவச மருத்துவ முகாம் இன்று நடந்தது. இந்த மருத்துவ முகாமை அமைச்சர் லட்சுமி நாராயணன் தொடங்கிவைத்தார்.

முகாமில் பொதுமருத்துவம், காது, மூக்கு, தொண்டை மருத்துவம், கண்சிகிச்சை, குழந்தைகள் சிகிச்சை, எலும்பு, தோல் தொடர்பான நோய்களுக்கு டாக்டர்கள் மருத்துவம் மற்றும் ஆலோசனைகளை வழங்கினா். மேலும் சிலருக்கு மேல் சிகிச்சைக்காகவும் பரிந்துரைக்கப்பட்டது.

1 More update

Next Story