ஏப்ரல், மே மாதத்துக்கான இலவச அரிசி


ஏப்ரல், மே மாதத்துக்கான இலவச அரிசி
x

புதுச்சோியில் ஏப்ரல் மற்றும் மே மாதம் வரையிலான இலவச அரிசி குடிமைப்பொருள் வழங்கல்துறையினால் ரேஷன் கடைகளில் பெற்றுக்கொள்ளலாம்.

புதுச்சேரி

புதுவை குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை இணை இயக்குனர் ரவிச்சந்திரன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பிரதான் மந்திரி கரீப் கல்யாண் அன்னயோஜனா திட்டத்தின்கீழ் பயனாளிகளுக்கு மத்திய அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்ட ஏப்ரல் மற்றும் மே மாதம் வரையிலான இலவச அரிசி குடிமைப்பொருள் வழங்கல்துறையினால் ரேஷன் கடைகளில் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஆகவே பயனாளிகள் தங்களது இலவச அரிசியை ரேஷன் கடை மூலம் பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அரிசி வினியோகம் நடைபெறும் மையங்களுக்கு வருகை தரும் பயனாளிகள் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

1 More update

Next Story