விநாயகர் சிலைகள் கடலில் கரைப்பு


விநாயகர் சிலைகள் கடலில் கரைப்பு
x

காலாப்பட்டு பகுதியில் 20 அடி உயரமுள்ள விநாயகர் சிலைகள் கடலில் கரைக்கப்பட்டன.

சேதராப்பட்டு

புதுவை காலாப்பட்டு செல்லியம்மன் நகர் பகுதியில் விநாயகர் சதுர்த்தி ஒருங்கிணைப்பு பேரவை சார்பில் காலாப்பட்டு ஈ.சி.ஆர். சாலையில் வைக்கப்பட்டுள்ள 20 அடி உயரமுள்ள விநாயகர் மற்றும் தமிழகப் பகுதியில் உள்ள கீழ்புத்துப்பட்டு, சின்ன கொழுவாரி, கனக செட்டிக்குளம, எல்லை தராசு, கழுபெரும்பாக்கம் உள்ளிட்ட பகுதியில் இருந்து 30-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு கடலில் கரைக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதனை புதுவை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தொடங்கி வைத்தார். காலாப்பட்டு கடற்கரையில் கிரேன் மூலம் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கடலில் கரைக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் கல்யாணசுந்தரம் எம.எல்.ஏ., அசோக் பாபு எம்.எல.ஏ., இந்து முன்னணி புதுச்சேரி கோட்ட பொறுப்பாளர் முருகையன், பேரவை தலைவர் குப்பன், விநாயகர் சதுர்த்தி பேரவை ஒருங்கிணைப்பு நிர்வாகிகள் உச்சிராடம், சரவணன், கோதண்டம், மணி, கருணாகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிகளை ஏற்பாடுகளை பேரவை பொருளாளர் கண்ணன் செய்திருந்தார்.


Next Story