ஜி.எஸ்.டி. அதிகாரிகள் விழிப்புணர்வு நடைபயணம்


ஜி.எஸ்.டி. அதிகாரிகள் விழிப்புணர்வு நடைபயணம்
x

காரைக்கால் மாவட்டத்தில், ‘எனது பில், எனது அதிகாரம்’ என்ற தலைப்பில் ஜி.எஸ்.டி. அதிகாரிகள் விழிப்புணர்வு நடைபயணம் மேற்கொண்டனர்.

காரைக்கால்

காரைக்கால் மாவட்டத்தில், 'எனது பில், எனது அதிகாரம்' என்ற தலைப்பில் விழிப்புணர்வு நடைபயணம் நடைபெற்றது. இதனை மாவட்ட கலெக்டர் குலோத்துங்கன் தொடங்கி வைத்தார். கலெக்டர் அலுவலகம் முன்பு தொடங்கிய இந்த நடைபயணத்தில் ஜி.எஸ்.டி ஆணையர் பத்மஸ்ரீ, கூடுதல் ஆணையர் பிரசாந்த் குமார் காகர்லா, துணை ஆணையர் தினேஷ் மற்றும் புதுச்சேரி, காரைக்காலை சேர்ந்த மத்திய ஜி.எஸ்.டி. அதிகாரிகள், அரசு கல்லூரி மாணவர்கள் கலந்துகொண்டனர். அவர்கள், புதிய திட்டம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இது குறித்து, ஜி.எஸ்.டி. அதிகாரிகள் கூறுகையில், இந்த புதிய திட்டத்தின் கீழ் வாடிக்கையாளர்கள் ரூ.200-க்கு மேல் பொருட்கள் வாங்கும் பில்களை "எனது பில், எனது அதிகாரம்" என்ற மொபைல் செயலியில் பதிவேற்றம் செய்யலாம். இதற்கான பரிசுகளை வென்றவர்களுடைய விவரம் ஒவ்வொரு மாதம் மற்றும் ஒவ்வொரு காலாண்டில் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு அறிவிக்கப்படுவார்கள். பரிசுத்தொகை ரூ.10 ஆயிரம் முதல் ரூ.1 கோடி வரை வழங்கப்படும் என்றனர்.

1 More update

Next Story