உறுதிமொழிக்குழு கூட்டத்தில் தி.மு.க. எம்.எல்.ஏ. ஆவேசம்


உறுதிமொழிக்குழு கூட்டத்தில் தி.மு.க. எம்.எல்.ஏ. ஆவேசம்
x

ஆட்டுப்பட்டியில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுவது தொடர்பாக உறுதிமொழிக்குழு கூட்டத்தில் தி.மு.க. எம்.எல்.ஏ. அனிபால் கென்னடி ஆவேசமாக கேள்விகளை எழுப்பினார்.

புதுச்சேரி

ஆட்டுப்பட்டியில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுவது தொடர்பாக உறுதிமொழிக்குழு கூட்டத்தில் தி.மு.க. எம்.எல்.ஏ. அனிபால் கென்னடி ஆவேசமாக கேள்விகளை எழுப்பினார்.

உறுதிமொழிக்குழு கூட்டம்

புதுவை சட்டமன்ற அரசாங்க உறுதிமொழிகள் குறித்த ஆலோசனை கூட்டம் சட்டசபை வளாகத்தில் உள்ள கமிட்டி அறையில் இன்று நடந்தது. கூட்டத்துக்கு உறுதிமொழிக்குழு தலைவர் நேரு எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.

கூட்டத்தை சபாநாயகர் செல்வம் தொடங்கி வைத்தார். இதில் எம்.எல்.ஏ.க்கள் ஏ.கே.டி.ஆறுமுகம், அனிபால் கென்னடி, சிவசங்கரன், வி.பி.ராமலிங்கம், அசோக்பாபு, சட்டசபை செயலாளர் தயாளன், துணை கலெக்டர் வினயராஜ், உள்ளாட்சித்துறை இயக்குனர் சக்திவேல், இணை இயக்குனர் கார்த்திகேயன், உழவர்கரை நகராட்சி ஆணையர் சுரேஷ்ராஜ் உள்பட அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

அடுக்குமாடி குடியிருப்பு

அப்போது உள்ளாட்சித்துறை, வருவாய்த்துறை மற்றும் கலால்துறையில் செயல்படுத்த வேண்டிய பணிகள் தொடர்பாக சட்டசபையில் முதல்-அமைச்சர் மற்றும் அமைச்சர்கள் அளித்த உறுதிமொழிகளை செயல்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது.

கூட்டத்தில் ஆட்டுப்பட்டியில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுவது காலதாமதம் தொடர்பாக அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. (தி.மு.க.) ஆவேசத்துடன் கேள்விகளை எழுப்பினார். ஒரு கட்டத்தில் அவர் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்யவும் முயற்சித்தார்.

அவரை சபாநாயகர் செல்வம் மற்றும் நேரு எம்.எல்.ஏ. ஆகியோர் சமாதானப்படுத்தினர். இதுதொடர்பாக விரைவில் மீண்டும் கூட்டத்தை கூட்டி ஆலோசிக்கலாம் என்றும் தெரிவித்தனர்.


Next Story