ஜிப்மர் பெண் ஊழியரிடம் நகை, பணம் மோசடி


ஜிப்மர் பெண் ஊழியரிடம் நகை, பணம் மோசடி
x

திருமணம் செய்வதாக கூறி ஜிப்மர் பெண் ஊழியரிடம் நெருங்கி பழகி, நகை, பணம் மோசடி செய்தவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

புதுச்சேரி

திருமணம் செய்வதாக கூறி ஜிப்மர் பெண் ஊழியரிடம் நெருங்கி பழகி, நகை, பணம் மோசடி செய்தவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

ஜிப்மர் பெண் ஊழியர்

புதுச்சேரி நகர பகுதியை சேர்ந்தவர் 49 வயது பெண். இவர் ஜிப்மர் பல் மருத்துவமனையில் பணி செய்து வருகிறார். இவர் ஏற்கனவே திருமணம் செய்து கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று தனது 15 வயது மகனுடன் வசித்து வருகிறார்.

இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஜான்சி நகரை சேர்ந்த திருமணமான தியாகராஜன் என்பவருடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது.

தியாகராஜன், தனது மனைவியை விவாகரத்து செய்து விட்டு அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறியுள்ளார். அதன் பின்னர் அவர், அந்த பெண்ணுடன் நெருக்கமாக பழகியுள்ளார். அப்போது இருவரும் தனிமையில் உல்லாசம் அனுபவித்துள்ளனர்.

நகை, பணம் மோசடி

இந்த நிலையில் தியாகராஜன் கடந்த 20.1.2020 அன்று நான் எனது மனைவியை விவாகரத்து செய்யப்போகிறேன். இதற்காக பணம் வேண்டும் என்று கேட்டுள்ளார். இதை நம்பி, அந்த பெண், ரூ.4 லட்சம் கொடுத்துள்ளார். மேலும் அவ்வப்போது ஆயிரக்கணக்கில் பணம் மற்றும் தங்க நகைகளை கொடுத்துள்ளார்.

ஆனால் தியாகராஜன் தனது மனைவியை விவாகரத்து செய்யவில்லை. மேலும் தான் மோசடி செய்யப்பட்டதை அறிந்த அந்த பெண், தான் கொடுத்த பணம் மற்றும் நகையை திருப்பி தரும்படி கேட்டுள்ளார். ஆனால் நகை, பணத்தை கொடுக்க மறுத்து தியாகராஜன், அவரை ஆபாசமாக திட்டி, கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

விசாரணை

இது தொடர்பாக பெரியகடை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் தியாகராஜன் மீது இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story