காளத்தீஸ்வரர் கோவில் தேரோட்டம்


காளத்தீஸ்வரர் கோவில் தேரோட்டம்
x

புதுவையில் காளத்தீஸ்வரர் கோவில் தேரோட்டம் இன்று நடைப்பெற்றது.

புதுச்சேரி

புதுவை மிஷன் வீதி காளத்தீஸ்வரர் கோவிலில் உள்ள வரதராஜ பெருமாள் கோவில் 20-ம் ஆண்டு பிரம்மோற்சவ விழா கடந்த மாதம் 24-ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது. விழாவில் ஒவ்வொரு நாளும் சாமி வீதியுலா நிகழ்ச்சி நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை நடந்தது. கோவில் முன்பு இருந்து புறப்பட்ட தேர், வீதிகள் வழியாக சுற்றி மீண்டும் கோவிலை வந்தடைந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர். மாலையில் சாமி உள்புறப்பாடு நடந்தது.

நாளை (செவ்வாய்க்கிழமை) சந்திர பிரபையில் வீதியுலாவும், நாளைமறுநாள் (புதன்கிழமை) இரவு 7 மணிக்கு ஊஞ்சல் உற்சவமும் நடக்கிறது. வியாழக்கிழமை காலை 10 மணிக்கு விடையாற்றி நிகழ்ச்சி நடக்கிறது.


Next Story