காரைக்கால் அம்மையார் மாங்கனித் திருவிழா


காரைக்கால் அம்மையார் மாங்கனித் திருவிழா
x

காரைக்கால் அம்மையார் மாங்கனித்திருவிழா ஜூன் 30-ந் தேதி மாப்பிள்ளை அழைப்புடன் தொடங்குகிறது.

காரைக்கால்

காரைக்கால் அம்மையார் மாங்கனித்திருவிழா ஜூன் 30-ந் தேதி மாப்பிள்ளை அழைப்புடன் தொடங்குகிறது.

மாங்கனித் திருவிழா

சிவபெருமான் திருவாயால் அம்மையே என்றழைக்கப்பட்ட காரைக்கால் அம்மையார் மாங்கனித் திருவிழா, ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு விழா குறித்து கோவில் அறங்காவல் குழுவினர் கூறியதாவது:-

வருகிற ஜூன் 30-ந் தேதி மாலை மாப்பிள்ளை அழைப்புடன் காரைக்கால் அம்மையார் மாங்கனி திருவிழா தொடங்குகிறது. முக்கிய நிகழ்ச்சியாக, ஜூலை 1-ந் தேதி காலை திருக்கல்யாணமும், அன்று மாலை பிச்சாண்டவர் (சிவன்) வெள்ளை சாத்தி புறப்பாடும், 2-ந் தேதி பிச்சாண்ட மூர்த்தி மற்றும் பஞ்சாமூர்த்திகளுக்கு மகா அபிஷேகமும் நடைபெறுகிறது.

பிச்சாண்டவர் வீதியுலா

தொடர்ந்து, காலை பிச்சாண்டவர் திருவீதியுலா செல்லும் நிகழ்ச்சியும், அதுசமயம், பக்தர்கள் மாங்கனிகளை வாரி இறைக்கும் நிகழ்ச்சியும் நடக்கிறது. அன்று மாலை பிச்சாண்டவரை காரைக்கால் அம்மையார் எதிர்கொண்டு அழைத்து அமுது படையல் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story