மது பார் கேண்டீன் உரிமையாளருக்கு அடி, உதை


மது பார் கேண்டீன் உரிமையாளருக்கு அடி, உதை
x

காரைக்காலில் ஆம்லெட்டுக்கு காசு கேட்ட மது பார் கேண்டீன் உரிமையாளரை அடித்து, உதைத்தவரை போலீசார் கைது செய்து விசாரைணை நடத்தி வருகின்றனர்.

காரைக்கால்

திருவாரூர் மாவட்டம் ஏனய்குடி வடக்கு தெருவைச் சேர்ந்தவர் பிரவீன்குமார். இவர் காரைக்காலை அடுத்த அம்பகரத்தூர் பகுதியில் உள்ள தனியார் மது பார் ஒன்றில் கேண்டீன் வைத்து நடத்தி வருகிறார். நேற்று மது பாருக்கு வந்த, நடுகந்தன்குடியைச் சேர்ந்த சுரேஷ் (வயது25) என்பவர் ஆம்லெட் கேட்டு பெற்றுள்ளார். அதற்கு பிரவீன்குமார் காசு கேட்டபோது, என்கிட்டியே காசு கேட்கிறாயா? என ஆபாசமாக திட்டி தனது நண்பர்கள் தினேஷ்குமார் (27), திராவிடமணி (32) ஆகியோருடன் சேர்ந்து பிரவீன்குமாரை அடித்து, உதைத்து மதுபாரில் இருந்த டேபிள், நாற்காலிகளை சேதப்படுத்தி விட்டு தப்பி சென்றனர். இதுகுறித்து அம்பகரத்தூர் போலீசில் பிரவீன்குமார் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுரேஷ், திராவிடமணியை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள தினேஷ்குமாரை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story