தெரு நாய்களை கட்டுப்படுத்த தனியாருக்கு பணி ஆணை


தெரு நாய்களை கட்டுப்படுத்த தனியாருக்கு பணி ஆணை
x

புதுவையில் தெரு நாய்களை கட்டுப்படுத்த தனியாருக்கு பணி ஆணை லழங்கி உழவர்கரை நகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.

புதுச்சேரி

புதுச்சேரி உழவர்கரை நகராட்சி ஆணையர் சுரேஷ்ராஜ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

உழவர்கரை நகராட்சிக்குட்பட்ட பகுதியில் தெரு நாய்களால் தொல்லைகள் அதிகரித்தவண்ணம் உள்ளதால் நாய்களை பிடித்து அப்புறப்படுத்துமாறு பொதுமக்களிடமிருந்து நகராட்சிக்கு புகார்கள் தொடர்ந்து வந்தவண்ணம் உள்ளது. இதன் பொருட்டு நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சுற்றித்திரியும் தெருநாய்களின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த ஒப்பந்த புள்ளி கோரப்பட்டு அரசு சாரா நிறுவனத்துக்கு பணியாணை வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, தெருநாய்களை பிடித்து கருத்தடை செய்து, வெறிநாய்க்கடி எதிர்ப்பு மருந்துகள் செலுத்தப்பட்டு அவற்றை பிடிபட்ட பகுதிகளிலேயே விடுவிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

மேலும் வீடுகள் மற்றும் வியாபார நோக்கில் வளர்க்கும் வெளிநாட்டு வகை நாய்களை சரியான முறையில் பராமரிக்காததால் அவை வெறிபிடித்து, நோய்வாய்ப்பட்ட பிறகு பொது இடங்களில் கைவிடப்படுவதால், அவை பொதுமக்களை அச்சுறுத்துவதோடு கடிக்கவும் செய்வதாக நகராட்சிக்கு தொடர்ந்து புகார்கள் வந்தவண்ணம் உள்ளது.எனவே நாய் வளர்ப்பவர்கள் தங்கள் நாய்களை ஆரம்ப நிலையிலிருந்து கால்நடை டாக்டர்கள் ஆலோசனையுடன் முறையாக பராமரிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.


Next Story