மருத்துவ கருத்தரங்கு

இந்திய மருத்துவ சங்கம் மற்றும் புதுச்சேரி ஈஸ்ட் கோஸ்ட் மருத்துவமனை சார்பில் மருத்துவ கருத்தரங்கு மருத்துவமனை கூட்ட அரங்கில் நடைபெற்றது.
மூலக்குளம்
இந்திய மருத்துவ சங்கம் மற்றும் புதுச்சேரி ஈஸ்ட் கோஸ்ட் மருத்துவமனை சார்பில் மருத்துவ கருத்தரங்கு மருத்துவமனை கூட்ட அரங்கில் நடைபெற்றது. கருத்தரங்கிற்கு இந்திய மருத்துவ சங்க தலைவர் சுதாகர் தலைமை தாங்கினார். டாக்டர் வெங்கட்ராமன், இந்திராகாந்தி மருத்துவக்கல்லூரி டீன் ராமச்சந்திர பட் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஈஸ்ட் கோஸ்ட் மருத்துவமனை மேலாண் இயக்குனர் முருகேசன், மனிதர்கள் குறைந்த வயதில் இறப்பதை தடுப்பது, ஆயுள் காலத்தை அதிகரிப்பது குறித்து பேசினார். மேலும் உலக அளவில் 600 கோடிக்கும் மேல் மக்கள் தொகை உள்ள நிலையில், இவர்களுக்கு ரத்தத்தில் இன்சுலின் அளவு அதிகமாக இருப்பதால் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், புற்றுநோய், நெஞ்சுவலி, சிறுநீரக பாதிப்பு ஏற்படுவதாகவும், இதனை தவிர்க்க இன்சுலின் அளவை குறைப்பது குறித்து பேசினார்.
கருத்தரங்கில் இந்திய மருத்துவ சங்க பொருளாளர் சிவராமகிருஷ்ணன் மற்றும் டாக்டர்கள் பலர் கலந்துகொண்டனர். முடிவில் செயலாளர் சீனிவாசன் நன்றி கூறினார்.