சட்டசபையை முற்றுகையிட்ட நரிக்குறவர்கள்


சட்டசபையை முற்றுகையிட்ட நரிக்குறவர்கள்
x

மனைப்பட்டா வழங்கக்கோரி நரிக்குறவ சமுதாய மக்கள் சட்டசபையை முற்றுகையிட்டனர்.

புதுச்சேரி

மனைப்பட்டா வழங்கக்கோரி நரிக்குறவ சமுதாய மக்கள் சட்டசபையை முற்றுகையிட்டனர்.

மனைப்பட்டா

புதுவை கலிதீர்த்தாள்குப்பம் பகுதியில் நரிக்குறவ சமுதாயத்தினர் சுமார் 40 குடும்பத்தினர் 30 வருடங்களுக்கும் மேலாக வசித்து வருகிறார்கள். அவர்களில் 23 பேருக்கு மனைப்பட்டா வழங்கப்பட்டது.

மீதமுள்ள 17 பேருக்கு மனைப்பட்டா வழங்கப்படவில்லை. அவர்கள் தங்களுக்கு மனைப்பட்டா வழங்கக்கோரி தொடர்ந்து அரசை வலியுறுத்தி வந்தனர். ஆனால் அவர்களுக்கு மனைப்பட்டா வழங்கப்படவில்லை.

சட்டசபை முற்றுகை

இந்தநிலையில் இன்று அவர்கள் முதல்-அமைச்சர் ரங்கசாமியை சந்திக்க சட்டசபைக்கு வந்தனர். அப்போது சட்டசபையில் முதல்-அமைச்சர் இல்லாததால் அவர்களை சபைக்காவலர்கள் சட்டசபை வளாகத்துக்குள் அனுமதிக்க மறுத்தனர்.

இதனால் அவர்கள் சட்டசபை மெயின்வாசலை முற்றுகையிட்டு சபைக்காவலர்களோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு விரைந்து வந்த பெரியகடை போலீசார் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி பாரதி பூங்காவில் அமர வைத்தனர்.

ரங்கசாமி உறுதி

பிற்பகலில் முதல்-அமைச்சர் ரங்கசாமி சட்டசபைக்கு வந்தார். அவரை சந்தித்து இலவச மனைப்பட்டா வழங்க கோரிக்கை விடுத்தனர். அவர்களிடம் உரிய இடத்தை தேர்வு செய்து மனைப்பட்டா வழங்க நடவடிக்கை எடுப்பதாக முதல்-அமைச்சர் ரங்கசாமியும் உறுதியளித்தார்.


Next Story