புதுச்சேரியில் தேசிய சட்ட பல்கலைக்கழகம்


புதுச்சேரியில் தேசிய சட்ட பல்கலைக்கழகம்
x

புதுச்சேரியில் தேசிய சட்ட பல்கலைக்கழகம் நிறுவப்பட உள்ளதாக பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி

புதுச்சேரியில் தேசிய சட்ட பல்கலைக்கழகம் நிறுவப்பட உள்ளதாக பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டசபையில் பட்ஜெட்டை தாக்கல் செய்து முதல்-அமைச்சர் ரங்கசாமி கூறியதாவது:-

இளைஞர் நலன் துறை

பள்ளிக்கல்வி துறையின் கீழ் இயங்கும் விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் தனித்துறையாக உருவாக்கப்படும். இதற்காக இந்த நிதியாண்டில் ரூ.3 கோடி ஒதுக்கப்படும். பள்ளிக்கல்வியின் தரத்தை உயர்த்தும் பொருட்டு அனைத்து அரசுப் பள்ளிகளின் வகுப்பறையும் பொலிவுறு வகுப்பறைகளாக (ஸ்மார்ட் கிளாஸ்) மாற்றப்படும்.

நடப்பு நிதியாண்டில் பள்ளிக் கல்விக்காக ரூ.802.92 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கலிதீர்த்தாள்குப்பம் காமராஜர் கலைக்கல்லூரியில் கூடுதல் வகுப்பறைகள் கட்டப்படும். மேலும் வில்லியனூர் கஸ்தூரிபாய் மகளிர் கல்லூரியில் புதிய கட்டிடம் கட்டப்படும்.

அனைத்து கல்லூரிகளையும் ஒருங்கிணைத்து தொகுப்பு கல்லூரிகளாக மாற்றி அதன் மூலம் பல்துறை கல்வி நிறுவனங்கள் நிறுவி தேவைப்படும் நேரத்தில் மாணவர்கள் படிப்பை நிறுத்தும்பட்சத்தில் பொருத்தமான சான்றிதழ் வழங்கப்படும். புதுச்சேரியில் தேசிய சட்ட பல்கலைக்கழகம் ஒன்று நிறுவப்படும். இதற்கான அடிக்கல் நாட்டு விழாவுக்கு பிரதமர் மோடி அழைக்கப்பட்டுள்ளார். நடப்பாண்டில் உயர் மற்றும் தொழில்நுட்ப கல்விக்காக ரூ.300 கோடியே 78 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தீயணைப்பு நிலையங்கள்

தவளக்குப்பம், கரையாம்புத்தூர், லிங்காரெட்டிபாளையம் மற்றும் காரைக்கால் பிராந்தியம் திரு-பட்டினத்தில் புதிய தீயணைப்பு நிலையங்கள் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. இத்துறையை நவீன மயமாக்குவதற்காக 54 மீட்டர் உயரம் செல்லக்கூடிய அதிநவீன ஸ்கை லிப்ட், பழுதடைந்த வாகனங்களுக்கு பதிலாக அனைத்து தீயணைப்பு நிலையங்களுக்கும் 18 நீர்தாங்கி ஊர்திகள் வாங்கப்படும்.

தீயணைப்புத் துறையை வலுப்படுத்த 52 தீயணைப்பாளர்கள், 12 டிரைவர்கள், 4 தீயணைப்பு நிலைய அதிகாரிகள், அதிநவீன ஸ்கை லிப்டை இயக்க 38 பணியாளர்கள் மற்றும் 3 உதவி கோட்ட தீயணைப்பு அதிகாரி பதவிகள் உருவாக்கப்படும்.

இவ்வாறு பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.

1 More update

Next Story