100 பேருக்கு மூக்கு கண்ணாடி

அரியாங்குப்பத்தில் இலவச கண் சிகிச்சை முகாமில் 100 பேருக்கு மூக்கு கண்ணாடி வழங்கப்பட்டது.
அரியாங்குப்பம
புதுச்சேரி அடுத்த பூரணாங்குப்பம் கிராமத்தில் ஜோதி சிலம்பம் சத்திரிய குருகுலம் மற்றும் பா.ஜ.க. மாநில கலாசாரப் பிரிவு சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் 3 நாட்கள் நடந்தது. ஜோதி செந்தில் கண்ணன் தலைமை தாங்கினார். முகாமை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தொடங்கி வைத்தார்.
கண் மருத்துவர் தமிழ்வாணன் மேற்பார்வையில் மருத்துவ குழுவினர் 100-க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள், பள்ளி மாணவ- மாணவிகளுக்கு கண் பரிசோதனை செய்தனர்.
முகாமின் நிறைவு நாளான இன்று பரிசோதிக்கப்பட்ட பயனாளிகள் 100 பேருக்கு இந்து முன்னணியின் தமிழக தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் மூக்குக் கண்ணாடிகளை இலவசமாக வழங்கினார்.
நிகழ்ச்சியில் இந்து முன்னணி மாநில தலைவர் சனில்குமார், மாநில பா.ஜ.க. கூட்டுறவு பிரிவு அமைப்பாளர் வெற்றிச்செல்வம், யோகா பயிற்சியாளர் ஆனந்தராஜ், கலாசார பிரிவு மாவட்ட பொறுப்பாளர் பெரியசாமி, சிலம்ப பயிற்சியாளர் சிவராமகிருஷ்ணன் மற்றும் குருகுல நிர்வாகிகள், பா.ஜ.க.வினர் கலந்து கொண்டனர்.






