தீயணைப்பு நிலையத்தில் அதிகாரிகள் ஆய்வு


தீயணைப்பு நிலையத்தில் அதிகாரிகள் ஆய்வு
x

புதுவை தீயணைப்பு நிலையத்தில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

புதுச்சேரி

புதுவை தீயணைப்பு நிலையம் வர்த்தக சபைக்கு சொந்தமான குடோனில் இயங்கி வருகிறது. இந்த குடோனின் மேற்கூரை சேதம் ஏற்பட்டதால் சமீபத்தில் மழை பெய்தபோது மழைநீர் அருவிபோல் தீயணைப்பு நிலையத்துக்குள் கொட்டியது. இதை யாரோ வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பரவ விட்டுள்ளனர். இந்தநிலை தொடர்பாக பொதுமக்கள் கடுமையான விமர்சனங்களையும் வெளியிட்டுள்ளனர்.

ஏற்கனவே பலமுறை தீயணைப்புத்துறை கோரிக்கை விடுத்தும் ஏற்கப்படாத நிலையில் வீடியோ வெளியானதை தொடர்ந்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க தொடங்கியுள்ளனர். இன்று பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் வல்லவன், கோட்ட தீயணைப்பு அதிகாரி இளங்கோ, நிலைய அதிகாரி முகுந்தன் ஆகியோர் மேற்கூரை சேதங்களை பார்வையிட்டனர்.

மழை பெய்தால் சேதம் ஏற்படாத அளவுக்கு தற்காலிகமாக அதை சரிசெய்ய அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். மேலும் புதிதாக தீயணைப்பு நிலையம் கட்டுவதற்கான இடங்களையும் தேர்வு செய்ய அரசு திட்டமிட்டுள்ளது.

1 More update

Next Story