கொரோனாவுக்கு முதியவர் பலி


கொரோனாவுக்கு முதியவர் பலி
x

புதுவையில் புதிதாக 52 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு முதியவர் பலியானார்.

புதுச்சேரி

புதுவையில் புதிதாக 52 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு முதியவர் பலியானார்.

52 பேருக்கு கொரோனா

புதுவை மாநிலத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. தற்போது தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. புதுச்சேரியில் இன்று காலை 10 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் 904 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

அவர்களில் 52 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியானது. புதுவையில் 39 பேரும், காரைக்காலில் 8 பேரும், ஏனாமில் 5 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.புதுவையில் இதுவரை 23 லட்சத்து 80 ஆயிரத்து 570 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவர்களில் 1 லட்சத்து 72 ஆயிரத்து 875 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று 33 பேர் குணமடைந்தனர். தற்போது ஆஸ்பத்திரிகளில் 10 பேர், வீடுகளில் 330 பேர் என 340 பேர் தனிமைப்படுத்தப்பட்டு தொடர் சிகிச்சையில் உள்ளனர்.

முதியவர் சாவு

புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த வெங்கட்டா நகரை சேர்ந்த 91 வயது முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் பலியானோர் எண்ணிக்கை 1,969 ஆக அதிகரித்துள்ளது. புதுவையில் தொற்று பரவல் 5.75 சதவீதமாகவும், குணமடைவது 98.66 சதவீதமாகவும் உள்ளது. நேற்று கொரோனா தடுப்பூசி முதல் தவணையை 242 பேரும், 2-வது தவணையை 1,862 பேரும், பூஸ்டர் தடுப் பூசியை 6 ஆயிரத்து 131 பேரும் செலுத்திக்கொண்டனர். இதுவரை 20 லட்சத்து 70 ஆயிரத்து 231 டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.


Next Story