குப்பை லாரி மோதி முதியவர் சாவு


குப்பை லாரி மோதி முதியவர் சாவு
x

புதுவையில் குப்பை லாரி மோதியதில் முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார்.,

புதுச்சேரி

முத்திரையர்பாளையம் மாரியம்மன்கோவில் வீதியை சேர்ந்தவர் செல்வம் (வயது 70). இன்று பிற்பகலில் மோட்டார் சைக்கிளில் ராஜீவ்காந்தி சிலை அருகில் இருந்து முத்திரையர்பாளையம் நோக்கி சென்றார். கலெக்டர் அலுவலகம் அருகே சென்றபோது அந்த வழியாக வந்த குப்பை லாரி அவரது மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இதில் கீழே விழுந்த செல்வம் தலையில் லாரி சக்கரம் ஏறி இறங்கியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் தலை நசுங்கி பரிதாபமாக இறந்தார். விபத்து குறித்து கோரிமேடு போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story